GADGETS

Smartphone, Laptop, Tablet, Smart TV, Other

Google Pixel 7 Pro போனை 59 ஆயிரத்திற்கு வாங்கலாம்! மிகப்பெரிய தள்ளுபடி சலுகைகள்

 Google நிறுவனம் அதன் புதிய Pixel 7 Pro போன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி விலையாக 22 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் இந்த போனை 60 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வாங்கமுடியும். கடந்த 2022 ஆம் ஆண்டு Google நிறுவனம் அதன் Pixel 7 மற்றும் Pixel 7 pro ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

 


அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உலகில் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ஒன்றாக இருக்கும் Google நிறுவனத்தின் Pixel போன்கள் கேமரா வசதிகள் மற்றும் திறன் அடிப்படையில் டெக்னாலஜியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

 

இந்த போன்களில் கடந்த ஆண்டு Pixel 7 மற்றும் Pixel 7 pro ஆகிய போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த போன்களுக்கு தற்போது Flipkart மற்றும் Amazon ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மிகப்பெரிய தள்ளுபடி விலையை அறிவித்துள்ளன. இந்த போன்களை நாம் 22 ஆயிரம் வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். இதை எப்படி நாம் வாங்குவது? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

 


இந்த போன் 6.7 இன்ச் AMOLED டிஸ்பிலே வசதி, 5000mAh பேட்டரி, 12GB , RAM, 128GB ஸ்டோரேஜ், Android 13, 50+448+12MP ட்ரிபிள் கேமரா வசதி உள்ளது.

 

Flipkart: இந்த போனில் 12GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் பல சலுகைகள் உடன் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் 84,999 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு 4% தள்ளுபடி விலையுடன் 81,199 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். நாம் பழைய போன்களை கொடுத்தால் 22,000 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கலாம். இதனால் போன் விலை 59,199 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.

Amazon: இதன் 12GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் Amazon மூலமாக 71,420 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். இதில் Exchange Offer எதுவும் இல்லை. இதன் Obsidian கலர் ஆப்ஷன் 71,420 ஆயிரம் ரூபாய் விலையும், hazel கலர் 73,080 ஆயிரம் ரூபாய் விலையிலும், Snow 73,250 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் 4,188 ஆசிரியர் பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

நாட்டில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் (TAKNIKI SHIKSHA VIDHAN COUNCIL) வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 





 

மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில்  இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம். 

 

பணியிட விவரம்:

 

யோகா ஆசிரியர்- 349

 

கலை ஆசிரியர்- 349

 

இசை ஆசிரியர்- 349

 

இந்தி ஆசிரியர்- 349

 

தெலுங்கு ஆசிரியர்- 349

 

ஆங்கிலம் - 349

 

கணக்கு ஆசிரியர்- 349

 

பொது அறிவியல் ஆசிரியர்-349

 

சமூக அறிவியல் ஆசிரியர்- 349

 

நூலகர்- 349

 

தொழில்நுட்ப உதவியாளார்- 349

 

அலுவலக உதவியாளார்- 349

 

மொத்த பணியிடங்கள் -  4,188

 

கல்வித் தகுதி: 

 

யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

 

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 

இதற்கு விண்ணப்பிக்க பி.எட். அல்லது இளங்கலை பட்டம் இருக்க வேண்டும். பி.எட். முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

வயது வரம்பு: 

 

இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்னப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

 

ஊதிய விவரம்: 

 

யோகா ஆசிரியர் - ரூ.32,000

 

கலை ஆசிரியர் - ரூ.32,000

 

இசை ஆசிரியர் - ரூ.32,000

 

இந்தி ஆசிரியர் -ரூ.35,000

 

தெலுங்கு ஆசிரியர் -ரூ.35,000

 

ஆங்கிலம் - ரூ.35,000

 

கணக்கு ஆசிரியர்- ரூ.35,000

 

பொது அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000

 

சமூக அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000

 

நூலகர் - ரூ.30,000

 

தொழில்நுட்ப உதவியாளார் -ரூ.30,000

 

அலுவலக உதவியாளார் -ரூ.20,000

 

விண்ணப்பிப்பது எப்படி? 

 

https://www.tsvc.in/application.php - என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பிக்கலாம். 

 

விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு - https://www.tsvc.in/online-application.php

 

விண்ணப்ப கட்டணம் : 

 

இதற்கு விண்ணப்பிக்க ரூ.500 விண்ணப்பிக்க கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

 

கவனிக்க.. 

 

ஆண் விண்ணப்பதாரர்களில் தகுதியாவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பள்ளிகளில் மட்டும் நியமிக்கப்படுவர். 

 

மகளிர் விண்ணப்பதாரர்கள் ஆண்,பெண் இருவரும் பயிலும் பள்ளிகளில் நியமிக்கப்படுவர். 

 

இதற்கு விண்ணப்பிக்க புதிய இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய இணையத்தில் விண்ணப்பித்தால் அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது.

 

முக்கிய நாட்கள்:

 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2023

 

ஒரே நாளில் 50 நகரங்களில் Jio 5G! தமிழ்நாட்டில் 11 நகரங்களில் வெளியீடு!

இந்தியாவிலேயே மிகப்பெரிய 5G சேவை அறிவிப்பாக ஒரே நாளில் 50 நகரங்களுக்கு 5G இணைய சேவையை ஜியோ நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. மொத்தம் 17 மாநிலங்களில் இந்த சேவை ஒரே நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.


 

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான Reliance Jio தற்போது இந்தியாவில் ஒரே நாளில் 50 நகரங்களுக்கு Jio True 5G சேவையை அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, தருமபுரி, ஓசூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய நகரங்களில் இப்போது 5G சேவை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்த நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு Jio Welcome Offer கிடைக்கும். அதன் பிறகு அவர்களால் 1GB/PS வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம். இதற்காக தனியாக நாம் எந்த ஒரு பணமும் செலுத்தத்தேவையில்லை. ஆனால் இந்த Welcome Offer கிடைக்க அவர்கள் 239 ரூபாய்க்கு மேல் மாத ரீசார்ஜ் செய்திருக்கவேண்டும்.

 

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் இப்போது 5G சேவை வந்துவிட்டதால் இனி அந்த நகரங்களின் தொழில்துறை மற்றும் இணைய சேவை என்பது பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஜியோ நிறுவனம் தமிழக அரசுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளது.

 

இந்த அறிமுகம் மூலமாக இனி இந்தியாவில் 184 நகரங்களில் இந்த JIO 5G சேவை கிடைக்கும். இதை ஜியோ நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய 5G அறிமுகம் என்று தெரிவித்துள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் இந்த 5G சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அதற்கான முயற்சிகளை வேகமாக எடுத்துவருவதாகவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஜியோ 5G சேவைகளின் நம்மைகள்

 

  1. 4G தொடர்பான எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனியாகவே இது இயங்கும்.
  2. இந்தியாவில் கிடைக்கு மிகப்பெரிய 5G அலைக்கற்றை அளவான 700MHZ, 3500MHZ, 26GHZ ஆகியவை ஜியோ நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
  3. ஒரே ஒரு தனிப்பட்ட 5G அலையில் நமக்கு 5G நெட்ஒர்க் கிடைப்பதால் தடையின்றி நாம் பயன்படுத்தமுடியும்.4G தொடர்பான எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனியாகவே இது இயங்கும்.
  4. இந்தியாவில் கிடைக்கு மிகப்பெரிய 5G அலைக்கற்றை அளவான 700MHZ, 3500MHZ, 26GHZ ஆகியவை ஜியோ நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
  5. ஒரே ஒரு தனிப்பட்ட 5G அலையில் நமக்கு 5G நெட்ஒர்க் கிடைப்பதால் தடையின்றி நாம் பயன்படுத்தமுடியும்.

ஆப்பிள் iPhone 15 Pro புதிய அம்சத்துடன் இந்த ஆண்டு வெளியாகும்!

 ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 15 ப்ரோ மாடலை இந்த ஆண்டு வெளியிடவுள்ளது. இந்த புதிய போன் தற்போது இருக்கும் ஐபோன் மாடலை விட சிறிய பெசல் வசதியுடன் வெளியாகும். இந்த போன் தற்போதைய போனில் இல்லாத கர்வ் டிஸ்பிலே இடம்பெறும். இதற்காகவே தென் கொரியாவை சேர்ந்த நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் கைகோர்த்துள்ளது.

 


உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமாக இருக்கக்கூடிய ஆப்பிள் நிறுவனம் உலகின் அதிக மதிப்புமிக்க டெக்னாலஜி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் விற்பனை செய்யும் ஆப்பிள் ஐபோன் உலகளவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் சிறந்த போனாக உள்ளது.

 

Google மற்றும் Samsung போன்ற மிகப்பெரிய ஸ்மார்ட்போன் ஜாம்பவான் நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஐபோன்களை விற்பனை செய்கிறது. அப்படி இந்த நிறுவனம் அதன் புதிய ஐபோன் 15 pro மாடலை விரைவில் வெளியிடவுள்ளது.

 

இந்த புதிய மாடல் ஐபோன் 15 தற்போதைய ஐபோன் 14 ப்ரோ மாடலை விட அகலம் குறைவாகவும், கர்வ் Bezel உள்ளது. இதனால் பார்ப்பதற்கு அதன் Apple Smartwatch போன்று இருக்கும். அளவு என்று பார்த்தால் தற்போதைய ஐபோன் 14 மாடலின் அதே அளவு இருக்கும்.

 


இதன் Bezel சிறியதாக இருப்பதால் முந்தய மாடல் போனிற்கும் இதற்கும் உள்ள வித்யாசம் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் டிஸ்பிலே அளவு என்று பார்த்தால் ஐபோன் 14 ப்ரோ மாடலின் அதே அளவில் இருக்கும்.

 

முக்கிய அம்சமாக இந்த ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் முதல் முதலாக periscope கேமரா வசதி உள்ளது. இதில் Optical Zoom வசதியும் இடம்பெறும். இதில் Folded Zoom வசதி முதல் முறையாக இடம்பெற்றுள்ளது.

 

இந்த புதிய Periscope lens ஆராய்ச்சிக்காக தென் கொரியாவை சேர்ந்த LG Innotek மற்றும் Jahwa Electronics ஆகிய நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து இதற்காக OIS Actuator உருவாக்கிவருகிறது. இதே வசதியை அந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டு வெளியிடவுள்ள ஐபோன் 16 ப்ரோ மாடலில் அறிமுகம் செய்யவுள்ளது.

11000 ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த மைக்ரோசாஃப்ட்! தொடரும் LAYOFF பரிதாபங்கள்!

 சமீபத்தில்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அன்லிமிடெட் லீவ் பாலிசி சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாகி வந்தது. அதன் இன்பம் குறைவதற்குள் 11,000 ஊழியர்களை மைக்ரோசாஃப்ட் வெளியேற்ற போவதாக வெளியாகியுள்ள தகவல் அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 


சமீபத்தில்தான் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறை பாலிசியை அறிவித்த அந்த நிறுவனம் தற்போது பெரிய குண்டை ஊழியர்கள் தலையில் போட்டுள்ளது. ஆம், அதன் ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் இருந்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

 

2,20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களோடு இயங்கி வரும் டெக் துறையின் முன்னணி நிறுவனம் சில ஆண்டுகளாகவே இறங்குமுகத்தில் தான் செயல்பட்டு வருகிறது. தற்போதைய மேக்ரோஎக்கனாமிக்கல் சூழலின் தாக்கத்தால் அமேசான்,ட்விட்டர், ஷேர்சாட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்த ஜனவரி மாதம் துவங்கி இன்று வரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உலகம் முழுவதிலும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு நாளைக்கு 1600 ஊழியர்களுக்கு குறையாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் கூட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதும் மற்ற நிறுவனங்களை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் பணி நீக்கத்துக்கு தயாராகியுள்ளது.

 

இதில் குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிவிஷனை சேர்ந்த ஊழியர்களையே இது அதிகம் பாதிக்க போவதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். மைக்ரோசாஃப்ட் சிஇஓ சமீபத்தில் பேசியபோது கூட, உலக அளவிலான மாற்றங்களுக்கு ஏற்றவாறு போராட மைக்ரோசாஃப்ட் உறுதியாக இல்லை என்பதையும் கூட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து அந்த நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

 

இந்தாண்டு துவங்கியதிலிருந்து கார்ப்பரேட் செக்டார், நிதி நிறுவனங்கள், மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தொடர் பணிநீக்கம் நடந்து வருகிறது. இதன் விளைவாக பல முன்னணி நிறுவனங்களின் ஊழியர்களும் பதற்றத்தில் உள்ளனர்.

நோக்கியாவின் T21 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்! 2K டிஸ்பிளே மற்றும் 8200mAh பேட்டரி வசதியுடன்!

 

இந்தியாவில் டேப்லெட் கருவிகள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பிரபல Nokia நிறுவனம் அதன் புதிய T21 Tablet அறிமுகம் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகம் ஆன Nokia T20 கருவியின் அடுத்த ஜெனெரஷன் மாடலாக வெளியாகியுள்ளது. இது Nokia.com மற்றும் கூட்டு நிறுவனங்களின் இணையத்தளத்தில் விற்பனை செய்யப்படும். இதை 1000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

 


இந்த டேப்லெட் மிகப்பெரிய டிஸ்பிலே, பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் கொண்டுள்ளன. இந்த நோக்கியா T21 டேப்லெட் ஜனவரி 22 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இது ஒரு Charcoal Grey கலர் ஆப்ஷனில் மட்டும் வெளியாகும். மேலும் 4GB+64GB ஆப்ஷனில் மட்டும் கிடைக்கிறது.

 

விலை மற்றும் வேரியண்ட்

 

இந்த டேப்லெட் WiFi மற்றும் WiFi+LTE ஆகிய வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. இதன் WiFi வேரியண்ட் 17,999 ஆயிரம் ரூபாய் விலையில் வெளியாகியுள்ளது. இதன் LTE வேரியண்ட் 18,999 ஆயிரம் ரூபாய் விலையில் வெளியாகியுள்ளது. இதனுடன் 1,999 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான Flip Cover கிடைக்கும்.

 

டிஸ்பிளே

 

இதில் 10.36 இன்ச் 2K LCD (1200x2000 Pixels) டிஸ்பிலே வசதி, 5:3 Aspect Ratio, 360 நிட்ஸ் பிரைட்னஸ், Netflix பார்த்து ரசிக்க தனியாக Widevine L1 வசதி, Stylus Pen சப்போர்ட் வசதியும் உள்ளது. இதனால் இதை நாம் அனைத்து வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம்.

 

கேமரா வசதி

 

இதன் மெயின் கேமரா 8MP மற்றும் முன்பக்க 8MP செல்பி கேமரா வசதி உள்ளது. இதனுடன் Autofocus சப்போர்ட், LED பிளாஷ், டூயல் ஸ்டேரியோ ஸ்பீக்கர் வசதி, OZO Spatial Audio இடம்பெறுள்ளன.

 

சிறப்பு வசதிகள்

 

இந்த டேப்லெட் நோக்கியா நிறுவனத்தின் Unisoc T612 சிப் வசதி, 4GB RAM, 64GB ஸ்டோரேஜ், MicroSD Slot வசதி போன்றவை உள்ளன. இதனுடன் WiFI, ப்ளூடூத் 5.0, 4G, GPS, NFC, USB Type-C Port, 3.5mm ஆடியோ ஜாக், 3 நாட்கள் வரை நீடிக்கும் 8200mAH பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜ்ர் வசதியும் உள்ளது.

 

இதில் Android 12 OS மூலம் இயங்குகிறது. மேலும் 2 வருடத்திற்கான OS அப்டேட் வசதியும் மாதம் ஒரு பாதுகாப்பு அப்டேட் வழங்குகிறது. இந்த டேப்லெட் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும்.

நம்பர் 1 இடத்தை இழந்தது Xiaomi! 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் முதலிடத்தில் சாம்சங்!

 

சீனாவின் Xiaomi நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதன் நம்பர் 1 இடத்தை இழந்துள்ளது. தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் 5 ஆண்டுகள் களைத்து மீண்டும் இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது. அதிகப்படியான போட்டியாளர்கள் காரணமாகவும் வாடிக்கையாளர்களின் தேவை மாறியுள்ளதாலும் இந்த நம்பர் 1 இடத்தை Xiaomi இழந்துள்ளதாக தெரிகிறது.

 


இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது 60% மேலாக உள்ளது. மக்கள் பலர் இந்த ஸ்மார்ட்போன்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக சீனாவை சேர்ந்த Xiaomi நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்தது.

 

ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை சரிவடைந்து சாம்சங் நிறுவனம் மீண்டும் அந்த நம்பர் 1 இடத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு பிடித்துள்ளது. இதனால் 5 ஆண்டுகள் ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

 

சாம்சங் முதலிடம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 21% பங்குகளை வைத்துள்ள சாம்சங் நிறுவனம் 6.17 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது.

 


இரண்டாவது இடத்தை Vivo நிறுவனம் பிடித்துவிட்டது. இந்த நிறுவனம் 6.4 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மூன்றாவது இடத்திற்கு Xiaomi நிறுவனம் சென்றுவிட்டது. இதில் Poco ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் அடக்கம்.

 

நான்காவது இடத்தை 5.4 மில்லியன் யூனிட்களுடன் Oppo நிறுவனமும் மற்றும் ஐந்தாவது இடத்தை 2.7 மில்லியன் யூனிட்களுடன் Realme நிறுவனம் பிடித்துள்ளது. இதில் Oppo நிறுவனத்தின் விற்பனையில் Oneplus நிறுவனமும் உள்ளது.

 

என்ன காரணம்?

 

இந்த விற்பனை சரிவிற்கு முக்கிய காரணமான Xiaomi நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை பார்க்கப்படுகிறது. நேரடி ஷோவ்ரூம்களில் அதிகம் கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஆன்லைன் விற்பனையில் அதிகம் கவனம் செலுத்தியது Xiaomi. ஆனால் பண்டிகை கால விற்பனை சரியாக நடக்காமல் அதனால் ஏற்பட்ட சரிவே Xiaomi நிறுவனத்தை பின்னுக்கு சந்தையில் பின்னுக்கு தள்ளி உள்ளது. அந்த நிறுவனத்தின் பழைய போன்கள் விற்பனையாகாமல் கிடப்பில் உள்ளது.

 

ஆனால் ஒப்போ மற்றும் விவோ ஆகிய நிறுவனங்கள் நேரடி ஷோவ்ரூம்களில் அதிக அளவு போன்களை விற்பனை செய்ததால் பல வாடிக்கையாளர்களை நேரடியாக ஈர்த்துள்ளது. இருந்தாலும் கடந்த ஆண்டு மொத்தமாக இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை 27% குறைந்துள்ளது.

 

2022 சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

Xiaomi நிறுவனம் இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு மொத்தமாக ஸ்மார்ட்போன் சந்தையில் 20% பங்குகளை வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் 19% பங்குகளை சாம்சங் நிறுவனம் உள்ளது. அடுத்த இடத்தில் 17% பங்குகளை விவோ நிறுவனமும், 15% பங்குகளுடன் ஒப்போ நிறுவனமும், 14% பங்குகளுடன் Realme நிறுவனமும் உள்ளது. மொத்தமாக கடந்த 2022 ஆம் ஆண்டு 151.6 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு விற்பனையை ஒப்பீடு செய்யும்போது 6% சரிவடைந்துள்ளது.

© all rights reserved
made with by tamilatech