Slider

11000 ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த மைக்ரோசாஃப்ட்! தொடரும் LAYOFF பரிதாபங்கள்!

 சமீபத்தில்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அன்லிமிடெட் லீவ் பாலிசி சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாகி வந்தது. அதன் இன்பம் குறைவதற்குள் 11,000 ஊழியர்களை மைக்ரோசாஃப்ட் வெளியேற்ற போவதாக வெளியாகியுள்ள தகவல் அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 


சமீபத்தில்தான் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறை பாலிசியை அறிவித்த அந்த நிறுவனம் தற்போது பெரிய குண்டை ஊழியர்கள் தலையில் போட்டுள்ளது. ஆம், அதன் ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் இருந்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

 

2,20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களோடு இயங்கி வரும் டெக் துறையின் முன்னணி நிறுவனம் சில ஆண்டுகளாகவே இறங்குமுகத்தில் தான் செயல்பட்டு வருகிறது. தற்போதைய மேக்ரோஎக்கனாமிக்கல் சூழலின் தாக்கத்தால் அமேசான்,ட்விட்டர், ஷேர்சாட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்த ஜனவரி மாதம் துவங்கி இன்று வரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உலகம் முழுவதிலும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு நாளைக்கு 1600 ஊழியர்களுக்கு குறையாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் கூட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதும் மற்ற நிறுவனங்களை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் பணி நீக்கத்துக்கு தயாராகியுள்ளது.

 

இதில் குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிவிஷனை சேர்ந்த ஊழியர்களையே இது அதிகம் பாதிக்க போவதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். மைக்ரோசாஃப்ட் சிஇஓ சமீபத்தில் பேசியபோது கூட, உலக அளவிலான மாற்றங்களுக்கு ஏற்றவாறு போராட மைக்ரோசாஃப்ட் உறுதியாக இல்லை என்பதையும் கூட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து அந்த நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

 

இந்தாண்டு துவங்கியதிலிருந்து கார்ப்பரேட் செக்டார், நிதி நிறுவனங்கள், மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தொடர் பணிநீக்கம் நடந்து வருகிறது. இதன் விளைவாக பல முன்னணி நிறுவனங்களின் ஊழியர்களும் பதற்றத்தில் உள்ளனர்.

0

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

disqus, tamilatech
© all rights reserved
made with by tamilatech