Slider

நம்பர் 1 இடத்தை இழந்தது Xiaomi! 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் முதலிடத்தில் சாம்சங்!

 

சீனாவின் Xiaomi நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதன் நம்பர் 1 இடத்தை இழந்துள்ளது. தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் 5 ஆண்டுகள் களைத்து மீண்டும் இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது. அதிகப்படியான போட்டியாளர்கள் காரணமாகவும் வாடிக்கையாளர்களின் தேவை மாறியுள்ளதாலும் இந்த நம்பர் 1 இடத்தை Xiaomi இழந்துள்ளதாக தெரிகிறது.

 


இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது 60% மேலாக உள்ளது. மக்கள் பலர் இந்த ஸ்மார்ட்போன்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக சீனாவை சேர்ந்த Xiaomi நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்தது.

 

ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை சரிவடைந்து சாம்சங் நிறுவனம் மீண்டும் அந்த நம்பர் 1 இடத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு பிடித்துள்ளது. இதனால் 5 ஆண்டுகள் ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

 

சாம்சங் முதலிடம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 21% பங்குகளை வைத்துள்ள சாம்சங் நிறுவனம் 6.17 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது.

 


இரண்டாவது இடத்தை Vivo நிறுவனம் பிடித்துவிட்டது. இந்த நிறுவனம் 6.4 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மூன்றாவது இடத்திற்கு Xiaomi நிறுவனம் சென்றுவிட்டது. இதில் Poco ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் அடக்கம்.

 

நான்காவது இடத்தை 5.4 மில்லியன் யூனிட்களுடன் Oppo நிறுவனமும் மற்றும் ஐந்தாவது இடத்தை 2.7 மில்லியன் யூனிட்களுடன் Realme நிறுவனம் பிடித்துள்ளது. இதில் Oppo நிறுவனத்தின் விற்பனையில் Oneplus நிறுவனமும் உள்ளது.

 

என்ன காரணம்?

 

இந்த விற்பனை சரிவிற்கு முக்கிய காரணமான Xiaomi நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை பார்க்கப்படுகிறது. நேரடி ஷோவ்ரூம்களில் அதிகம் கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஆன்லைன் விற்பனையில் அதிகம் கவனம் செலுத்தியது Xiaomi. ஆனால் பண்டிகை கால விற்பனை சரியாக நடக்காமல் அதனால் ஏற்பட்ட சரிவே Xiaomi நிறுவனத்தை பின்னுக்கு சந்தையில் பின்னுக்கு தள்ளி உள்ளது. அந்த நிறுவனத்தின் பழைய போன்கள் விற்பனையாகாமல் கிடப்பில் உள்ளது.

 

ஆனால் ஒப்போ மற்றும் விவோ ஆகிய நிறுவனங்கள் நேரடி ஷோவ்ரூம்களில் அதிக அளவு போன்களை விற்பனை செய்ததால் பல வாடிக்கையாளர்களை நேரடியாக ஈர்த்துள்ளது. இருந்தாலும் கடந்த ஆண்டு மொத்தமாக இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை 27% குறைந்துள்ளது.

 

2022 சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

Xiaomi நிறுவனம் இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு மொத்தமாக ஸ்மார்ட்போன் சந்தையில் 20% பங்குகளை வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் 19% பங்குகளை சாம்சங் நிறுவனம் உள்ளது. அடுத்த இடத்தில் 17% பங்குகளை விவோ நிறுவனமும், 15% பங்குகளுடன் ஒப்போ நிறுவனமும், 14% பங்குகளுடன் Realme நிறுவனமும் உள்ளது. மொத்தமாக கடந்த 2022 ஆம் ஆண்டு 151.6 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு விற்பனையை ஒப்பீடு செய்யும்போது 6% சரிவடைந்துள்ளது.

0

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

disqus, tamilatech
© all rights reserved
made with by tamilatech